×

வடக்கு சாலைக்கிராமத்தில் அம்மன் கோயில் ஊரணியை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

இளையான்குடி, அக் 16: இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தில் பழமைவாய்ந்த அம்மன் கோயில் ஊரணி உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஊரணி சேதுமகாளி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்டது. சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அம்மன் கோயில் ஊரணியில் ஆண்கள் மட்டுமே குளிப்பது வழக்கம். மேலும் வற்றாத இந்த ஊரணியில் வடக்கு சாலைக்கிராமம், சாலைக்கிராமம், குயவர்பாளையம், அய்யம்பட்டி, பிச்சங்குறிச்சி, உட்பட ஊரணியில் தண்ணீர் கிடப்பதை பார்த்து, இந்த வழியில் பயணம் செய்வோர், தங்களது வாகனங்களை நிறுத்தி குளித்துவிட்டு செல்வது இன்று வரை பழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த அம்மன் கோயில் ஊரணியில் தாகத்தை தீர்த்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த ஊரணி நான்கு புறமும் கரைகள் சேதமடைந்துள்ளது. ஊரணி உள் பகுதி மண் மேடாக உள்ளது. அதனால் ஊரணி தண்ணீர் கொள்ளளவு குறைந்தது வருகிறது. ஊரணிக்கு வரும் மேல்வரத்து வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜேசிபி எந்திரம் மூலம் ஊரணியின் உள்பகுதிகளை ஆழப்படுத்தி கரைகள் மற்றும் வாய்க்காலை சீரமைக்க அரசுத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வடக்கு சாலைக்கிராமத்தில் அம்மன் கோயில் ஊரணியை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amman Koil Pani ,North Road village ,Ilayayankudi ,Amman ,Dinakaran ,
× RELATED 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்